99/66 திரை விமர்சனம்

0
41

ஒரு தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66 எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99 வது எண் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் , மனைவிக்கும் நட்பு ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். அதே சமயம், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் தலைவர் இரவு நேரங்களில் வெளியே செல்ல முயற்சிப்பதும், ஆந்தை ஒன்று அவரை தடுத்து நிறுத்தும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பணத்திற்காக மனைவியை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் போட, அதில் இருந்து தொடர்ந்து தப்பித்து வருகிறார். இதற்கிடையே, திடீரென்று இரவு நேரத்தில் தோழியை அவரது கணவர் கொலை செய்வதை உணரும் அந்தப் பெண், அவரை குடியிருப்புவாசிகள் உதவியோடு காப்பாற்ற முயற்சிக்கும் போது, அந்த பெண் ஏற்கனவே இறந்த விட்டார் என்பதும், 99 எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது. இந்த மர்மமுடிச்சுக்களை திகிலுடன் கலந்து நமக்கு சொல்வதுதான் இந்த ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு).

இந்த படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சாதுவாக oru கதாபாத்திரமும் ஆவி புகுந்த பிறகு அவரது தோற்றமும் நம்மை ரசிக்க வைக்கிறது,
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, புத்த மதத்தின் ஈர்ப்பால், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதோடு, தனக்கு தீங்கு இழத்தவருக்கும் எதுவும் நடக்க கூடாது, என்று நினைக்கும் நல்ல மனதுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார். பின் நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் புதுமுகங்கள் என்றாலும், தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதே போல் சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரின் இருப்பு படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது,.

இந்தப்படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், அவரது ஒளிப்பதிவு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முழு படத்தையும் படமாக்கியிருந்தாலும், பல்வேறு கோணங்கள் மூலம் ஒவ்வொரு முறையும் புதிய வடிவில் அடுக்குமாடி குடியிருப்பை காண்பித்து, ஒரே இடம் என்ற உணர்வை பார்வையாளர்கள் மனதில் இருந்து நீக்கி விடுகிறார். நிச்சயம் பாராட்டுக்கள்

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி தயாரித்தும் இருக்கிறார் எம்.எஸ்.மூர்த்தி, ஒரு வீடு, அதில் புதிதாக குடியேறுபவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், என்று திகில் படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமாண பாணியோடு கதை சொல்லியிருந்தாலும், சில கதாபாத்திரங்கள் மூலம் திரைக்கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார். முதல் படம் என்ற உணர்வு எங்குமே வராத அளவிற்கு டெக்னிகலாக படத்தை கையாண்டுள்ளார்.

மொத்தத்தில், ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here