தம்பியும் அக்காவும் ஒரு விபத்தில் தங்களது பெற்றோரை இழந்து விடுகிறார் . அந்த பெண் தடவியல் நிபுணராக பணிபுரிகிறார், விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு மன ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் தம்பி, அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதோடு, தான் வேலையையும் ஒரு பக்கம் பார்த்துக் கொள்கிறாள், இந்நிலையில் அவளது தம்பி போன்ற மனநிலையில் இருக்கும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். அந்த வழக்கை காவல்துறை அதிகாரி ஒருவர் மிக சாதாரணமாக கையாண்ட நிலையில், சில தினங்களில் அதே முறையில் அவளது தம்பியும் இறக்கிறார். இந்த இரண்டு மரணங்களுக்கு இருக்கும் ஒற்றுமை மற்றும் பிரேத பரிசோதனையில் கிடைத்த சில தகவல்களை வைத்து, இரண்டும் கொலை என்பதை அந்த பெண் கண்டுபிடிக்கிறார். அதே பாணியில் மூன்றாவதாக இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இதன் மூலம் கொலை செய்வது ஒரு தொடர் சைக்கோ கொலை என்பதை தெரிந்து கொள்கிறார், இதன் பின் அந்த கொலையாளியை கண்டுபிடிக்கிறார் ?, எதற்காக இந்த கொலைகள்? என்பதை சஸ்பென்ஸ் கலந்து சொல்வது தான் இந்த ‘அனோமி’.
இந்த படத்தில் நாயகனை காட்டியும் அந்த பெண் கதாபாத்திரம் தான் முழுக்க முழுக்க படத்தை நகர்த்தி செல்கிறார், நாயகியாக நடித்திருக்கும் பாவனா, தடவியல் நிபுணர் என்றாலும், காவல்துறையை மிஞ்சும் விதத்தில் தனது புலன் விசாரணை மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார். நடிப்பின் மூலம் தன் கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
அதே போல் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரஹ்மானின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சாதாரணமாக பயணித்தாலும், இரண்டாம் பாதியில் கதையை சுமந்து, பாவனாவுக்கு தோள் கொடுக்கும் கதாபாத்திரமாக கவனம் ஈர்க்கிறது. தனது அளவான நடிப்பு மூலம் படத்திற்கு ரஹ்மான் இன்னும் பலம் சேர்த்திருக்கிறார்.
இப்படத்தில் பாவனாவின் தம்பியாக ஷெபின் பென்சன் நடித்திருக்கிறார், காதலனாக நடித்திருக்கும் அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.
ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் படத்திலிருந்து வெளியே செல்லாமல் கதையை விவரிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை அதிகம் சத்தம் இன்றி, நன்றாக இருந்தது , இந்தப் படத்திற்கு சுஜித்சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், கொலை செய்யப்பட்டவர்களின் கண்கள் ஏதோ சொல்ல வருவதை தனது கேமரா மூலம் பார்வையாளர்களுக்கு புரிய வைத்திருப்பதோடு, கொலைக்கான காரணத்தை காட்சி மொழியில் விவரித்த விதம் மூலம் வியக்க வைத்திருக்கிறார்.
இதுவரை வெளியான சைக்கோ திரில்லர் பாணியிலான திரைப்படங்களில் சொல்லப்படாத ஒரு விசயத்தை அறிவியல் பூர்வமாக கையாண்ட விதம் மற்றும் வெறும் வசனமாக மட்டும் இன்றி, அதை காட்சியாகவும் விவரித்த முறை பார்வையாளர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும். இயக்குனர் ரியாஸ் மராத் திற்கு பாராட்டுகள் ,
மொத்தத்தில், ‘அனோமி’ நல்ல திரை அனுபவம்.















