ஆட்டி திரை விமர்சனம்

1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மதுரையில் இன்ஸ்பெக்டராக இசக்கி கார்வண்ணன் குற்றவாளி ஒருவரை என்கவுன்டர் செய்ய செங்காடு என்ற காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறார். புதிய காவல் நிலையத்திற்கு செல்லும் இசக்கி கார்வண்ணன் அங்கு எந்த ஒரு குற்றச் சம்பவங்களும் நடக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறார். பல ஆண்டுகளாக எந்த வழக்கும் பதியப்படாத அந்த காவல் நிலையத்திற்கு அவர் வந்த நேரத்தில், அந்த ஊரின் பள்ளிக்கூட வாத்தியார் வந்த 4 நாட்களில் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கின் விசாரணையில் இறங்கும் இன்ஸ்பெக்டருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகின்றன. இறுதியில் வாத்தியாரை கொலை செய்தது யார் ? எதற்காக ? கொலைகாரன் யார் ? என்பதை இசக்கி கார்வண்ணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’ஆட்டி’ படத்தின் மீதிக்கதை.

இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் கறாரான மற்றும் கம்பீரமான நடிப்பை வழங்கியுள்ளார். கிராமத்து பெண்ணாக அபி நட்சத்திரா மிகச் சிறப்பான மற்றும் தைரியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர், பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

1970களின் காலகட்டத்தைக் கண்முன்னே நிறுத்திய சிபி சதாசிவம் ஒளிப்பதிவு, தீசனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிட்டு இத்திரைப்படத்தில் ஒரு கொலை அதை தொடர்ந்து நடக்கும் சில மர்மங்களை வைத்து ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *