மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த தொடங்குகிறார் பாலு எஸ்.வைத்தியநாதன். இதனால், அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகிறது. மறுபக்கம், நாயகி அஞ்சனா கிர்த்தி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள்Continue Reading

கருணாகரன், கிளி ஜோசியம் பார்ப்பவர். இவர், அடுத்து என்ன நடக்க போகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர். மணிகண்டன், பெண்பித்தர். ஸ்ரீநாத், தங்கையின் மேல் அளவிட முடியாத அன்பு வைத்திருப்பவர். ஆவிகளை தனது கண்களால் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர். இவரது தொழில் பேய் ஓட்டுவது. ரமேஷ் திலக், பல குரலில் பேசக்கூடிய திறமை படைத்தவர். வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட இவர்கள் நால்வருக்கும், ரோட்டில் கிடந்த 2000 ரூபாய்Continue Reading

நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார்.Continue Reading

எவருக்கும் அடங்காமல் நினைத்ததை வைராக்கியத்துடன் முடிப்பவரை எமகாதகன் என்பார்கள். அதன் பெண்பால் வடிவம்தான் இது. அப்படி, இறந்தும் தன் வைராக்கியத்தை முடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. கதையின் நாயகியாக வரும் ரூபா கொடுவாயூர் எப்படிப்பட்ட பிடிவாதக்காரர் என்பதை முதல் காட்சியிலேயே நமக்கு தெரியப்படுத்தி வருகிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். அத்துடன் அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருப்பதும் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. அப்பா ராஜு ராஜப்பன் அம்மா கீதாContinue Reading

ஹீரோவாக அறிமுகமாகியுள்ள தனுஷின் அக்கா மகன் பவிஷ் காதல் தோல்வியில் இருக்கிறார்,சமையல் கலைஞரான அவருக்கு அவருடைய பெற்றோராக நடித்துள்ள நரேன்-சரண்யா இருவரும் பெண் பார்க்கும் போது பிரியா வாரியர் அறிமுகம் ஆகிறார், பிரியா வாரியாரை தன்னுடைய பள்ளி தோழி என்று அறிந்த பிறகு இருவரும் தங்களை புரிந்து கொள்ள கால அவகாசம் கேட்கின்றனர், இதற்கிடையில் பவிஷின் முன்னாள் காதலியான அனிகாவிடம் இருந்து திருமண அழைப்பிதழ் வருகிறது,பவிஷின் முன்னாள் காதல் கதையைContinue Reading

மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் தந்தையாக வருகிறார் சமுத்திரக்கனி. எங்கும் எதிலும் நேர்மை ஒன்றே தனது இலட்சியம் என்ற பாதையில் பயணித்து வருகிறார். அரசு அதிகாரியாக இருந்து எந்த இடத்திலும் யாரிடத்திலும் லஞ்சம் வாங்காமல் தனது பணியை நேர்மையாக செய்து வருகிறார். ஆனால், மகன் தன்ராஜோ குடி, சூதாட்டம், மோசடி என தன் வாழ்க்கையை தவறான பாதையில் கொண்டு செல்கிறார். மகனை நினைத்து நாளுக்கு நாள் கவலையில்Continue Reading

நாயகன் மித்ரனும் (கதிரவென்), நாயகி ஸ்ரீஷாவும் (சாந்தினி கவுர்) உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். எனினும், அவர்களுக்கிடையில் நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள் போல் தீராப்பிரச்சனை ஒன்று இருந்து வருகிறது… காதலி ஸ்ரீஷாவை விரைவில் திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழ ஆசைப்படுகிறார் மித்ரன். ஆனால் ஸ்ரீஷாவோ, தொழில் ரீதியிலும், வாழ்க்கையிலும் நல்ல நிலைக்கு உயர்ந்த பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் திருமணம் பற்றி மித்ரன் பேச்செடுக்கும் போதெல்லாம்Continue Reading

பழுத்த அனுபவம் மிக்க அரசியல்வாதியான முத்தையா தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டினை பெற்று தோல்வி அடைகிறார். அதன் பிறகு அந்தக் கட்சியை விட்டு வெளியேறி, சுயேசையாகப் போட்டியிடுகிறார். இதில் அவர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பது ஒரு புறமும் மறுபுறத்தில் அவருடைய திருமணமாகாத மூன்று தங்கைகளுக்கும் மாமியார் தொல்லைகள் இல்லாத வகையில் ஒரே குடும்பத்தில் சகோதரராக இருக்கும் மூவரை திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார். ஆனால் அவருடைய தங்கைகள்Continue Reading

எதிரெதிர் எண்ணம் கொண்ட இருவர் இல்வாழ்க்கையில் இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் தினசரி. மென்பொருள் துறையில் பணியாற்றி கை நிறையச் சம்பளம் வாங்கும் நாயகன் ஸ்ரீகாந்த்துக்கு தம்மைவிட வசதியான வீட்டில் பெண்ணெடுத்து வளமாக வாழவேண்டும் என்று ஆசை.அவர் எண்ணத்துக்கேற்ற பெண்ணாக நாயகி சிந்தியா லூர்தே இருக்கிறார்.அவரையே திருமணமும் செய்கிறார்.ஆனால்,திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த அவருடைய ஆசை வேறாக இருக்கிறது.அது நாயகனின் எண்ணத்துக்கு நேரெதிராக இருக்கிறது.அப்புறமென்ன?Continue Reading

ஸ்கூல் காலத்தில் இருந்தே ஜெகவீரும், மீனாட்சியும் ப்ரண்ட்ஸ். ப்ரி வெட்டிங் ஸ்டூடியோ நடத்துகிறார்கள். அந்த டீமில் புதிதாக சேரும் ‘90 கிட்ஸ்’ ஆன ஆண்டனி பாக்யராஜ், ‘‘அதெப்படி ஒரு இளம்பெண்ணும், ஆணும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்க முடியும். அவர்களுக்குள் காதல் இருக்கிறது’’ என்று சொல்கிறார். ‘‘அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை. நாங்க 2 கே கிட்ஸ், எங்க உலகம் வேறு என்கிறார் அந்த டீமில் இருக்கும்’’ பாலசரவணன். இதற்கிடையில், ஜெகவீரும்,Continue Reading