அறம் செய் திரை விமர்சனம்

0
714

மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த தொடங்குகிறார் பாலு எஸ்.வைத்தியநாதன். இதனால், அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகிறது. மறுபக்கம், நாயகி அஞ்சனா கிர்த்தி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள் தரப்பில் பல இழப்புகளை சந்தித்தாலும், கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

அறம் செய் படத்துக்கு கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் பாலு எஸ். வைத்தியநாதன் முதல் படத்திலேயே இப்படி ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டதற்காகவே அவரை தாராளமாக பாராட்டலாம். அஞ்சனா கீர்த்தி தன்னுடைய வசன உச்சரிப்பை அழகாக கொடுத்து தனது கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார். லொள்ளு சபா ஜீவா மெகாலி மீனாட்சி ஆகியோரும் நிறைவாகவே நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. இயக்குனர் பாலு எஸ். வைத்தியநாதன் இன்னும் சற்று அதிக கவனம் செலுத்தி இருந்தால் படம் வெகு சிறப்பாகவே அமைந்திருக்கும். ஆயினும் மாறுபட்ட கதை களத்திற்காகவும், துணிச்சலான முயற்சிக்காகவும் ஒருமுறை அறம் செய் படத்தை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here