TEST திரை விமர்சனம்

தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் அறிவியலாளர் மாதவன்.தன்னுடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்துக்காக அலைகிறார். அவர் மனைவி நயன்தாரா.பள்ளி ஆசிரியை.திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அதற்காக மருத்துவம் செய்து அதற்காகத் தயாராகிறார். இந்திய மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரர் சித்தார்த்.கடைசியாகச் சில போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்பதால் அவரை ஓய்வு பெறச் சொல்கிறது நிர்வாகம் அதைமீறி சென்னையில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஐந்துநாள் போட்டியில் விளையாடி தன் திறனை வெளிப்படுத்த நினைக்கிறார். இந்த மூன்று பேரும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே ‘டெஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.

முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா மூன்று பேரும் அசுரத்தனமாக நடித்திருக்கிறார்கள். ஆதித்யாவாக அர்ஜுனின் மகனாக குழந்தை நடிகர் லிரிஷ் ரஹவ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

விராஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவு, சக்திஸ்ரீ கோபாலனின் இசையும் உணர்ச்சித் தாக்கத்தை அதிகரிப்பதிலும் திரைக்கதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதிலும் முக்கிய பங்கு வகித்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

எழுதி இயக்கியிருக்கும் சசிகாந்த், உச்சநிலை மனிதர்கள், மத்திய நிலை மனிதர்கள் ஆகியோரின் மனஉணர்வு நிலைகளை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

போட்டி, தேர்வு ஆகிய இருபொருள்படும் தலைப்பை வைத்து அவ்விரண்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *