Friday திரை விமர்சனம்

மைம்கோபி ஒரு அரசியல் வாதி மற்றும் அதிகார பலம் கொண்ட ரவுடி. தனக்கு எதிரான ஒருவரை போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்கவேண்டும் என்பது அவர் டார்கெட். KPY தீனாவிற்கு தன் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்பது இலக்கு. அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை கரை சேர்க்க வேண்டும் என்பது டார்கெட். அவரின் தம்பிக்கு அண்ணன் போல் சம்பவக்காரன் ஆகவேண்டும் என்பது குறிக்கோள். இவர்களின் ஒட்டுமொத்த இலக்கும் ஒரே புள்ளிக்குள் வருவது தான் Friday படத்தின் திரைக்கதை

தனது திறமை மற்றும் அனுபவத்தால் தான் தோன்றும் எல்லாக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார் மைம்கோபி. KPY தீனாவிற்கு இது முக்கியமான படம். தரமான கேரக்டரை உள்வாங்கி தரமாக நடித்துள்ளார். நாயகி சித்து குமரேசன் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் உள்பட எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ்,திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தைக் காட்சிகளிலும் உணர வைக்க உழைத்திருக்கிறார். பாடல்களே இல்லாத படத்தில் பின்னணி இசை மூலம் தன் இருப்பை நிறுவியிருக்கிறார் இசையமைப்பாளர் டுமே.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரி வெங்கடேஷ்.ஏற்கெனவே பார்த்துப் பழகிய கதை மற்றும் களம் என்றாலும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அவர்களின் மறுபக்கம் ஆகியனவற்றையும் காட்டி படத்தை வேறுபடுத்தியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *