விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
99

விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் “துச்சாதனன்” திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விகாஷ், சிங்கம்புலி, தமிழ் செல்வி, மணிமாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தளபதி இயக்கியுள்ளார். இசை விஜய் பிரபு, ஒளிப்பதிவு பாலமுருகன். படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் ராக்கி ராஜேஷ் சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளார். நடனம் பவர் சிவா. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ் கவனிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது,
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள், படிக்க வைக்கிறார்கள், சொத்து சேர்த்து வைக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் மொழிப்பாடம், அறிவியல், கணிதம், கணிப்பொறி என எல்லாமும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி குழந்தைகளுக்கு ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுத் தர தவறி விடுகின்றனர். இன்று சமூகத்தில் நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் காரணம் ஒழுக்கக் கேடுதான். அப்படி ஒழுக்கக் கேட்டால் நடந்த விபரீதம் என்ன, அதற்கு காவல்துறை எடுத்த நெஞ்சைப் பதறவைக்கும் நடவடிக்கை என்ன என்பதே படத்தின் கதை என்கிறார்!

‌ஹீரோ விகாஷ் மற்றும் இயக்குநர் தளபதி இருவரும் கடும் உழைப்பில் “துச்சாதனன்” படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி உள்ளனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here