யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய்

0
119

கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாகவும், ‘காதல்’ படத்தில் சந்தியாவிற்கு அம்மாவாகவும், 40’க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காதல் மல்லேஸ்வரி. இவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதை கேள்விப்பட்டவுடன் நடிகர் தக்‌ஷன் விஜய், ஓடோடி சென்று முதல் ஆளாக பெருந்தொகை கொடுத்து உதவி, ஆறுதல் கூறினார்.

தன்னை காண வந்த முதல் நடிகரான தக்‌ஷன் விஜயை பார்த்ததும், ‘நான் யாருமில்லாத அனாதையாக இருக்கிறேன்’ என்று கூறி, கதறி அழுதார் நடிகை காதல் மல்லேஸ்வரி.

அவர் அழுவதை பார்த்த நடிகர் தக்‌ஷன் விஜயும் கண்கலங்கி, அழுது விட்டார். பிறகு அவருக்கு ஆறுதல் கூறி, பெருந்தொகை செலவிற்கு கொடுத்துவிட்டு, வேண்டிய உநவிகளை செய்கிறேன் என்று சொல்லி வந்தார் நடிகர் தக்‌ஷன் விஜய்.

நடிகர், நடிகைகள், திரைத்துறை பிரபலங்கள் ஆதரவற்ற தனக்கு உதவ வேண்டுமென்று கண்ணீர் விட்டு, கோரிக்கை வைத்தார் நடிகை காதல் மல்லேஸ்வரி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here