மெல்லிசை திரை விமர்சனம்

தனியார் பள்ளியில் பிடி ஆசிரியராக பணியாற்றுகிறார் கிஷோர். இவரது மனைவியாக இருக்கும் சுபத்ராவும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.
டிவியில் பாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பானது கிஷோருக்கு கிடைக்கிறது. இதனால் அவர் அடிக்கடி பாட்டு போட்டியில் பங்கேற்கிறார். பிரபலமாகவும் ஆகிறார். பாட்டு போட்டியில் பங்கேற்பதனால், பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர் வேலையை இழக்கும் நிலைமையும் ஏற்பட்டு விடுகிறது. இதன்பிறகு, அவர்களது குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் சில நடக்கின்றன ? அது அவர்களை எந்த நிலைக்கு தள்ளியது ? என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர் குமார், குடும்பதா தலைவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குடும்ப பொறுப்பு, ஆசை, லட்சியம் என அனைத்தையும் தூக்கி சுமக்கிற ஒரு சராசரி மனிதராக சிறப்பான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், குடும்ப தலைவி கதாபாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.

கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன், இருவருமே கதை நகர்விற்கு துணை நிற்கிறார்கள். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜின் இசையில் பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவு காட்சியோடு பயணிக்க வைக்கிறது.

குடும்பம், ஆசை, லட்சியம், தோல்வி, வெற்றி ஆகிவற்றை மைய மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவகையிருக்கிறார் இயக்குநர் திரவ் இத்திரைப்படத்தில் இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமான முறையில் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *