விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா’. தெரிந்த கதை என்றாலும் தற்போதைய தலைமுறைக்கு எளிமையாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதை சொல்லப்பட்டுள்ளது. பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள்.
அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். குறிப்பாக கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
பிரமாண்டமான காட்சியமைப்புகள், வண்ணங்கள், சவுண்ட் எஃபெக்ட்ஸ் ஆகியவை படம் முழுவதும் தியேட்டரில் ஒரு சிறப்பு அனுபவத்தை தருகின்றன.
திரைக்கேற்ற கதையை ஜெயபூர்ணதாஸ் எழுதியுள்ளார். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அஸ்வின்குமார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
மகா அவதார் நரசிம்மா’ – குழந்தைகளும், குடும்பங்களும் ரசிக்கும்படி உருவாக்கிய சிறந்த அனிமேஷன் படம்.















