ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்

0
239

நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சிகள் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்டில், மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்…
சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது. ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய ஆக்சன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் தானே ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பு முழுவதும் ஜெய் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்து ஒத்துழைத்ததால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது.

இத்திரைப்படத்தில் பானு ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா, மோகன்ராம், தேனப்பன், பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள். தொழில் நுட்ப குழுவில் ஒளிப்பதிவு- ஜானி லால் / செவிலோராஜா D. F. Tech, படத்தொகுப்பு – ஆண்டனி, இசை – விஷால் பீட்டர், கலை இயக்கம் – N.M.மகேஷ், Vfx மேற்பார்வையாளர் – பிரபாகர், ஸ்டண்ட் – ஸ்டன்னர் சாம், நடனம் – ராதிகா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here