ஜின் திரை விமர்சனம்

0
145

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஒருவரிடம் இருந்த நல்ல ஜின் ஒன்று நாயகன் முகேன் ராவ் வசம் வருகிறது. அது வந்த பிறகு, காதல், கல்யாணம், இசைக்குழு தொடக்கம் என்று அவரது வாழ்க்கையில் பல நல்ல விசயங்கள் நடக்கிறது. அதே சமயம், அவ்வபோது வீட்டில் இருப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் வர, அவரது மனைவியும் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதற்கெல்லாம் காரணம் ஜின் தான் என்று நினைத்து அதை வெளியே வீசி விடுகிறார். ஆனால், அந்த ஜின் முகேனை விடாமல் துரத்துவதோடு, மனைவி மீதான தாக்குதல் மற்றும் ஜின் பற்றிய ரகசியம் ஒன்று முகேனுக்கு தெரிய வருகிறது. அது என்ன?, அதற்கும் அவரது மனைவி தாக்கப்பட்டதற்கும் என்ன சம்மந்தம்?, என்பதை கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஃபேண்டஸி ஜானரில் சொல்வது தான் ‘ஜின்’.

நாயகனாக நடித்திருக்கும் முகேன் ராவ், நடிப்பதை விட சிரிப்பதை தான் அதிகம் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, கொஞ்சம் காதல் காட்சி, சில பாடல் காட்சிகளில் தலை காட்கிறார். வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார். பாலசரவணன் வரும் காட்சிகள் சில சிரிக்க வைப்பது ஆறுதல். வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி, சிறுவன் ரித்விக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில் ஆரம்பக் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது. அதன் பிறகு வரும் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். எழுதி இயக்கியிருக்கும் டி.ஆர்.பாலா, ஜெய்சங்கரின் ‘பட்டணத்தில் பூதம்’ முதல் பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ வரை நாம் பார்த்து பழகிய பூதத்தை ஜின் என்ற பெயரில், புதிய வடிவில் கொடுத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here