கருப்பையா முருகன், பிரேம்ஜி மீண்டும் இணையும் மியூசிக்கல் ஹாரர்

0
61

கடந்த வருடம் பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பாக, இயக்குனர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி, பிரேம்ஜி நடிப்பில் வெளியான “வல்லமை” திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. பிரேம்ஜியை வித்தியாசமான கோணத்திலும், சமூகத்தில் நடக்கும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனையை பேசிய விதத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து கருப்பையா முருகன், பிரேம்ஜி கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. மியூசிக்கல் ஹாரராக வித்தியாசமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு சூரஜ்நல்லுசாமி, இசை பிரேம்ஜி, பேட்லர்ஸ் சினிமா சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கிறார் கருப்பையா முருகன். மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here