மைலாஞ்சி திரை விமர்சனம்

சென்னையில் புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தனது நிறுவனத்திற்காக அரியவகை பறவையை படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அங்கு நாயகி கிரிஷாவுடன் நட்பாக பழகி வருகிறார்.

ஒரு கட்டத்தில் நாயகன் ஸ்ரீராம் தன் காதலை நாயகி கிரிஷாவிடம் கூற நினைக்கையில் கிரிஷா குரூப் தன் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவரை காதலித்ததாகவும் அவர் இப்போது சென்னையில் வேலை பார்த்து வருவதாகவும் அவருடன் சேர்த்து வைக்குமாறு கூறுகிறார்.

இதையடுத்து கிரிஷா குரூப்பை அவரது காதலருடன் சேர்த்து வைப்பதில் ஸ்ரீராம் தீவிரம் காட்டி வருகிறார். ஒரு கட்டத்தில் கிரிஷா குரூப் காதலரை கண்டு பிடித்து ஊட்டிக்கு வரவழைக்கிறார்.

ஒரு சூழலில் கிரிஷா குரூப் ஸ்ரீராம் மீதுதான் உணமையான காதல் இருப்பதை புரிந்து கொள்கிறார். அதை ஸ்ரீராமிடம் சொல்ல நினைக்கையில் கிரிஷா குரூப் காதலர் அங்கு வருவதோடு திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்கிறார்.

இறுதியில் நாயகி கிரிஷா தன் காதலரை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? ஸ்ரீராமிடம் காதலை கூறினாரா? இல்லையா? என்பதே ’மைலாஞ்சி ’ படத்தின் மீதிக்கதை.

புகைப்படக் கலைஞரான நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், இயல்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், நடனம் , காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது , காதலி ஆசையை நிறைவு செய்ய எடுக்கும் முயற்சி என அனைத்திலும் சிறப்பாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கிரிஷா குரூப் அழகு தேவதையாக அழகாக வலம் வருகிறார். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சிறுவனிடம் காதலிக்க யோசனை கேட்பது கொஞ்சம் சரியாக இல்லை.

முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது. கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக நடித்திருக்கும் நபர், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க முடிகிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. செழியனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் உள்ளது.

நாயகன் தான் காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அஜயன் பாலா இத்திரைப்படத்தில் ஒரு அழகான காதலை உணர்வு பூர்வமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *