மெர்ரி கிறிஸ்மஸ் விமர்சனம்

0
216

கதைக்களம்நீண்ட நாட்களுக்கு பிறகு துபாயில் இருந்து மும்பைக்கு விஜய் சேதுபதி வருகிறார். அன்று இரவு வெளியே ஓட்டல் ஒன்றுக்கு செல்கிறார். அப்போது ஒருவர் விஜய் சேதுபதியிடம் நான் அவசர வேலையாக வெளியே செல்கிறேன் அதை கத்ரீனாவிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறுகிறார். விஜய் சேதுபதியும் அவரிடம் இந்த விஷயத்தை சொல்கிறார்.முதல் சந்திப்பிலேயே விஜய்சேதுபதிக்கு கத்ரீனாவை பிடித்துபோய் விடுகிறது. இதையடுத்து விஜய் சேதுபதி அவரை பின் தொடர்கிறார். இருவரும் அந்த ஒரு இரவில் நண்பர்களாகி நெருக்கமாக பழகுகின்றனர். அப்போது கத்ரீனா தன் குழந்தையை தூங்க வைத்துவிட்டு விஜய்சேதுபதியுடன் வெளியே செல்கிறார். இருவரும் சந்தோஷமாக அன்றிரவு கழித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் பொழுது கத்ரீனாவின் கணவர் இறந்த நிலையில் கிடக்கிறார். இறுதியில் கத்ரீனாவின் கணவரை கொன்றது யார்? இந்த கொலை எதற்காக நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆல்பர்ட் ஆரோக்கியசாமி என்ற வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கத்ரினா கைஃப் துணிச்சல் மிக்க மற்றும் அனைத்து விசயங்களையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பயணிக்கும் பெண் வேடத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, அந்த வேடத்தை மிக சரியாகவும் கையாண்டிருக்கிறார். கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ், குழந்தை நட்சத்திரம் பரி மகேஷ்வரி ஷர்மா, அஷ்வினி கால்சேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களுக்கு வேலை குறைவு என்றாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ப்ரீத்தம் இசையில் பாடல்கள் கேட்கலாம். டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை இதம்.

வலிமையான எழுத்தை அதற்குச் சற்றும் சளைக்காமல் காட்சிகளாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here