மீண்டும் இணையும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா, வெற்றி கூட்டணி !

0
250

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “RRR” படத்திற்கு பிறகு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குநர் கொரட்டால சிவாவுடன், பன்மொழியில் உருவாகும் பிரமாண்ட படத்தில் இணைகிறார். இக்கூட்டணி ஏற்கனவே 2016 ல் வெளியான “ஜனதா காரேஜ்” திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடதக்கது.

#NTR30 (எ) #NTRKoratalaSiva2 படத்தினை நந்தமூரி கல்யாண்ராம் வழங்குகிறார். Yuvasudha Arts சார்பில் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் NTR Arts சார்பில் கொசராஜு ஹரிகிருஷ்ணா இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறார்கள். பன்மொழிகளில் மிகப்பிரமாண்ட இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது.

படம்குறித்து தயாரிப்பாளர் கூறும்போது

ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா கூட்டணியில் படம் உருவாகும் போது, ரசிகர்களிடம் விண்ணை முட்டும் எதிர்பார்ப்பு தானாகவே உருவாகிவிடும். அந்த எதிர்பார்ப்புகளை, முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில், படம் இருக்கும். படத்தின் மற்ற விபரங்கள், படத்தின் பூஜையின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

இப்படத்தின் பூஜை வெகு விரைவில் நடைபெறவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஜீன் மாதம் பிற்பகுதியில் திட்டமிடப்படப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் 29 பன்மொழிகளில் இப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here