துருவ நட்சத்திரம் படக்குழுவின் அறிக்கை

0
40

“துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் வெளியீட்டிற்கு வழிவகை செய்துள்ளார் மாண்புமிகு நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி.

எங்கள் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் தயாரிப்பில் செய்யப்பட்டுள்ள பெரும் முதலீடு, மற்றும் இத்திரைப்படத்துடன் தொடர்புடைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் மற்றும் திரை வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். படத் தயாரிப்போடு தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலன்களும் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சில நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் திரைப்படத்தை வெளியிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கும் மேலாக கணிசமான நேரத்தை ஒதுக்கி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி, அவர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி, அதன்பின் திரைப்படத்தை வெளியிடுவதற்கான உத்தரவை பிறப்பித்த மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதன் தயாரிப்பு செலவு சுமார் ரூ.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here