கட்ஸ் திரை விமர்சனம்

0
72

கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை (ஸ்ருதி நாராயணன்) மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்போது ரவுடி கும்பலால் குத்தப்படுகிறார் நடிகர் (ரங்கராஜ்). தனது மனைவியை மருத்துவரிடம் கொண்டு சேர்த்துவிட்டு தனக்கு மகன் பிறந்திருப்பது தெரிந்ததும் இறந்துவிடுகிறார். அதேபோல் தன்னிடம் பணம் பறித்த போலீஸை குத்திவிட்டு தானும் இறந்துவிடுகிறார் ஸ்ருதி நாராயணன் . தனது அம்மாவின் ஆசைப்படி திரும்பிப் பார்ப்பதற்குள் போலிஸாகி விடுகிறான் மகன். அனாதையான அனுவை( நான்சி) காதலித்து திருமணம் செய்து கொண்டு, அனாதை பெண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.ஆனால் அவரது நேர்மைக்கு பல வழிகளில் தொடர்ந்து சோதனைகள் ஏற்படுகிறது.அவரது மனைவி திடீரென்று கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். காதல் மனைவியின் மரணம் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தி பித்து பிடித்தவர் போல் இருக்கிறார் ரங்கராஜ்;.அதன் பின் மனைவியை கொன்றது யார் என்ற உண்மை தெரிய வருகிறது. இறுதியில் ரங்கராஜ் கொலையாளியை கண்டுபிடித்;தாரா? மனைவியை கொலை செய்ய காரணம் என்ன? கொலையாளிக்கும் தனது தந்தை பெத்தனசாமிக்கும் இருந்த முன்விரோதம் என்ன? கொலையாளிக்கு எப்படி தண்டனை கொடுத்தார்? ரங்கராஜ் எதிரிகளிடமிருந்து தன் மகளை காப்பாற்ற முடிந்ததா? என்பதே படத்தின் கதை.

இரட்டை வேடங்களில் அறிமுக நடிகர் ரங்கராஜ்: விவசாயி அப்பாவாகவும், போலீசாக மகனாகவும் நடித்துள்ளார். காதல், செண்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்திலும் நல்ல முயற்சி செய்திருக்கிறார். ஸ்ருதி நாராயணன், நான்ஸி, டெல்லி கணேஷ், சாய் தீனா, அரந்தாங்கி நிஷா தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். சினிமாவின் பல்வேறு கால கட்டங்களில் நாம் பார்த்த வழக்கமான பழிவாங்கும் ஆக்‌ஷன் படம் தான் என்றாலும், சில மாற்றங்களோடு சொல்ல முயன்று இருக்கிறார். திரைக்கதையில் சற்று கூறுதல் கவனம் செலுத்தி இன்னும் நன்றாகவே வந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here