இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது

0
5

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடாக மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூலைப் பெற்று இந்திய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனது இருப்பை தக்க வைத்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பல படங்கள் வெளிவந்தாலும் அதை எல்லாம் தாண்டி, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாது, இரண்டாவது வார இறுதிக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக உள்ளது. மேலும், பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை இந்தத் திரைப்படம் அனைத்து வயதினருக்கும் கொடுக்கிறது எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆன இந்தப் படம் இதுவரை, இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 130 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வரும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்த ஆண்டில் இந்தியாவில் ஹாலிவுட் திரைப்பட வெளியீடுகளுக்கு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here